இறைமையை உணர சமாதி நிலை உன்னதம்
ராஜயோகத்தின் பூரண நிலை
சமாதி நிலை அடைய எட்டின் கூற்றில் உளம் பொருந்தி
வகுக்கப்பட்ட பாதையில் பயணம் செய்தல் வேண்டும்
எட்டின் கூற்று திருமூலரின் வாக்கு! பதாஞ்சலியின் சூத்திரம் !
இருவா் கூற்றும் வாய்மை! அதுவே அட்டங்க யோகம் !
வெறும் ஆசனங்களும் உள் நோக்கா மூச்சுப் பயிற்சியும் உடல் வெளிநடம்
அட்டங்க யோகம் மனதை உள் செலுத்தி ஒருமைப்படுத்தும் உள்நடம்
யோகத்தின் முதல் வழி இயமம்.
தீது அகற்றல் என்பதே இயமம்.
நம் எண்ணம் நம் செயல் நம் வார்த்தை பிறருக்கு தீது விளைவிக்காதது…
யோகத்தின் இரண்டாவது வழி நியமம்
நம்மின் ஒழுக்க நெறியே இயமம்
நம் எண்ணம் நம் செயல் நம் வார்த்தை நமக்கே தீதுவிளைவிக்காதது
யோகத்தின் முன்றாவது வழி ஆசனம்
நம் உடலின் பரிணாமத்தை முறைப்படுத்துவதே ஆசனம்
நம் எண்ணம் நம் செயல் நம் வார்த்தை ஒருங்கிணைந்து சமநிலையாய் நிற்க.
யோகத்தின் நான்காவது வழி பிராணாயாமம்
நம் உடலின் பரிணாமத்தை வசப்படுத்துவதே பிராணாயாமம்
நம் எண்ணம் நம் செயல் நம் வார்த்தை ஒடு்ங்கிடாமல் பிரபஞ்சத்தில் பரந்து விரிய,
யோகத்தின் ஐந்தாவது வழி பிரத்தியாகாரம்
நம் எண்ணங்களை மனதை உள் நோக்கி திருப்புவதே பிரத்தியாகாரம்
நம் எண்ணம் நம் செயல் நம் வார்த்தை கட்டுக்கிடங்கி ஒருமைப்பட்டு நிற்க.
யோகத்தின் ஆறாவது வழி தாரணை
உள் நோக்கி திருப்பிய மனதை அகத்தில் நிலை பெறச்செய்வதே தாரணை,
நம் உடல் மனம் அறிவு பிராணா ஒருங்கிணைந்து முழுமையாக பிரபஞ்ச சக்தியை உணர…..
யோகத்தின் ஏழாவது வழி தியானம்
நிலை பெற்ற மனதால் அறிவும் புலனும் மாறுபாடு இல்லாமல் செய்வதே தியானம்
நம்முள் சுருட்டியபடி எழும்ப காத்திருக்கும் குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப…..
யோகத்தின் எட்டாவது வழி சமாதி
நம் உடம்பின் சக்தியும் பிரபஞ்ச சக்தியும் இணைவதே சமாதி…..
நம் உயிா் இறைமையோடு கலந்து விடுவதே சமாதி
இதுவே யோகத்தின் பூரண நிலை…..
ராஜயோகத்தின் பூரண நிலை…..
மனிதனாய் பிறத்தல் அரிது
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய் பிறந்தது
யோகத்தின் முலம் இறைமையைக் காணவே
பிறப்பை வீணாய் கழித்து புழுவினும் கீழாக மறைய அல்ல!
ஆகவே யோகம் செய்!