காதலின் முகம் எதுவரை?
காதலின் முகம் காதலின் வெற்றிவரை என்றால்
காதலின் வெற்றி எதுவரை? திருமணமா? கூடும்வரையிலா?
திருமணம் நடந்த கணத்தில் காதல் போய் கடமைதானே மேலோங்கும்? பின் ஏது காதல்?
கூடுவதுதான் காதலென்றால், காதலெதற்கு? காமம் போதுமே!!!
காதலின் வெற்றிவரை என்பதே ஒரு முடிவுதானே! வரை என்றபின், அதற்கு தொடர்ச்சியில்லையே!
காதலின் முகம் காதல் உள்ளவரை என்றால், வரை என்பதால் காதலும் முடிவுரும்தானே!
காதலின் முகம் முடிவில்லாதது என்றால், அது உலகில் இல்லாததா? ஏனென்றால் உலகில் முடிவில்லாத ஒன்றே இல்லையே! உலகே ஒரு நாள் முடியவேண்டியதுதானே!.
காதலின் முகம் பிரபஞ்சம்வரை என்றாலும்கூட, பிபஞ்சமும் ஒருநாள் அழியும்தானே!
காதலின் முகம் முடிவில்லாதது என்றால், காதல் என்பது தான் என்ன?
காதல் என்பது உணர்வா? உணர்வு பிரிவடையும் தன்மை உடையதால், காதல் உணா்வாகாது!
பின் எதுதான் காதலின் முகம்?
பிரக்ஞை. ஆங்கிலத்தில் Consciousness.
அது மட்டும் அழிவில்லாதா என்ன?
ஆம். அது ஒன்றே, பிரக்ஞை ஒன்றே, பிரபஞ்சமே அழிந்த பின்னரும் ஓரிடத்தில் நிற்கும். பின் பரவும். அடுத்த பிரபஞ்சம் உண்டாக்க!
பிரபஞ்சம் கூட பிரக்ஞை இல்லாமல் இல்லை! ஆகையால் பிரக்ஞை இல்லாமல் எந்த படைப்பும் இல்லை!
எந்தப் படைப்பும் பிரக்ஞை இல்லாமல் இல்லை!
அப்படி என்றால் காதல் இல்லாமல் எந்தப்படைப்பும் இல்லை! பிரபஞ்சமே கூட!
ஆதலினால் காதல் செய்யாவிடினும், காதல் செய்தாலும் , காதல் தெரியாமலிருந்தாலும், காதலை வெறுத்தாலும் அறிவீர் ஒன்றை,
காதலினால்தான் நம் வாழ்தல், நாமாகிய மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு உயிர்த்துளியும்…..