காதல் ராகங்கள்

இவை என்னுடைய படைப்புகளல்ல, ஆனால்
காலத்தாலும் கொரோனா வைரஸாலும் அழிக்க முடியாத காவிய வரிகள்…
படைத்தவர் யாராயினாலும் படைத்ததினால் இப்பாடல்களின் பிதாமகராவாரா?
அது தெரியவில்லை ஆனால் இப்பிரபஞ்ச சக்தியின்
சில துகள்கள் இவர்கள் மீது தூவியிருக்கும்போல !!!
இவ்வரிகள்…

காதல் / காதலியின் வர்ணனைகள் இல்லை…
காதலின் கூடல் சார்ந்த கவிதைகள் இல்லை..
இவை உன்னதமான காதலும் அன்பும் உணர்வும்…

வண்ணத்தில் உள்ள வரிகளின் தத்துவத்தை உணர நீங்கள்
காதல் செய்திருக்க வேண்டும்!
காதல் அறிந்திருக்க வேண்டும்!
காதல் புரிந்திருத்தல் வேண்டும்!

காதலின் முகம் இப்பாடல்களின் வரிகளாக!!!

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி

வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்…
அதுதான் தெய்வத்தின் சன்னதி!!!

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி…
கணவர் என்றால் அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி?

நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே!!

மண் பார்த்து விளைவதில்லை மரம்பார்த்து தொடர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!!!

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா…

கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை…

என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!

காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே…

நலம் பெற வேண்டும் நீயென்று
நாளும் என்னெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று
நலந்தானா..

கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நலந்தானா..

உடலும் உள்ளமும் நலந்தானா….

Share Article :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *