ஆயிரம் விளக்கங்கள் …. ஆயிரம் அறிவுரைகள்… இன்னும் பல ஆயிரம் கருத்துகள்…
எதைக் கேட்பது, எதை விடுவது, எதை தொடர்வது…
என்னமோ ஏதோ…. எண்ணம் திரளுது மனதில்….
ஒன்று மட்டும் நிச்சயம்.
வருவதும் கொரனா கையில்… வந்தால் சரியாவதும் அல்லது பலியாவதும் அதன் கையிலேயே …
மருத்துவம் தனிமைப் படுத்துதல் மட்டுமே அறியும் தற்போதைக்கு, ஏனென்றால் மருந்தில்லை கொரானாவை குணப்படுத்த….
அதனால் நாம் செய்யத்தேவையானது எல்லாம் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வது மட்டும்தான்…
நமக்கு வராமல் தடுப்பதற்காக மட்டுமல்ல ….
நமக்கே தெரியாமல் நமக்கும் வந்துவிட்டால் நம்மால் மற்றவர்களுக்கு வராமல் இருப்பதற்காகவும்.
அது மட்டுமல்ல நம்மால் மருத்துவ பணியாளர்களுக்கும் சுமை குறையவும்தான்.
பெரியதாய் ஒன்றும் உதவ வேண்டாம்… இதுவே மிகப்பெரிய உதவி… செய்வோமா?